183 ரன் இலக்கை எட்டி நியூஸிலாந்து சாதனை

சென்னை, பிப். 9- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தானை 5 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது நியூஸிலாந்து அணி. ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள நியூஸிலாந்து – ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்​பாஸ், இப்​ராகிம் ஸத்​ரன் ஜோடி நிதானமான தொடக்​கம் கொடுத்​தது. 6-வது ஓவரை வீசிய லாக்கி பெர்​குசன், தொடக்க ஜோடியை வெளி​யேற்​றி​னார். இப்​ராகிம் ஸத்​ரன் 12 பந்துகளில் 10 ரன்​களும், ரஹ்மனுல்லா குர்​பாஸ் 22 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​களும் எடுத்த நிலை​யில் லாக்கி பெர்​குசன் பந்​தில் ஆட்டமிழந்தனர். பவர்​பிளே​வில் ஆப்​கானிஸ்​தான் அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 44 ரன்​கள் எடுத்​தது. இதன் பின்னர் நடு​வரிசை​யில் குல்​பா​தின் நயீப் அதிரடி​யாக விளை​யாடி​னார். அவர், தனது 4-வது அரை சதத்தை 29 பந்​துகளில் விளாசினார். மட்​டையை சுழற்​றிய குல்​பா​தின் நயீப் 35 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் விளாசிய நிலை​யில் ரச்​சின் ரவீந்​திரா பந்​தில் ஆட்டமிழந்தார். செடிக்​குல்லா அடல் 24 பந்​துகளில், 29 ரன்​களும் டார்விஷ்ரசூலி 13 பந்​துகளில் 20 ரன்​களும், அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 7 பந்​துகளில், 14 ரன்​களும், முகமது நபி 7 பந்துகளில், 10 ரன்​களும் சேர்க்க 20 ஓவர்​களில் ஆப்கானிஸ்​தான் அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 182 ரன்கள் குவித்​தது. நியூஸிலாந்து அணி சார்​பில் லாக்கி பெர்​குசன் 2 விக்கெட்கள் வீழ்த்​தி​னார். மெட் ஹென்​றி, ஜேக்​கப் டஃபி, ரச்​சின் ரவீந்​திரா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்றினர். இதையடுத்து 183 ரன்​கள் இலக்​குடன் நியூஸிலாந்து அணி பேட் செய்​தது. ஃபசல்​ஹக் ஃபரூக்கி வீசிய முதல் ஓவரில் டிம் ஷெய்​பர்ட் 3 பவுண்​டரி​களை விரட்​டி​னார். ஆனால் முஜீப் உர் ரஹ்​மான் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரு பந்​துகளில் ஃபின் ஆலன் (1), ரச்​சின் ரவீந்​திரா (0) ஆகியோர் ஆட்​ட​மிழந்​தனர். 14 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய கிளென் பிலிப்​ஸ், டிம் ஷெய்​பர்ட்​டுடன் இணைந்து ஆப்​கானிஸ்​தான் அணி​யின் சுழற்​பந்துவீச்சை பதம் பார்த்​தார். அதிரடி​யாக விளை​யாடிய கிளென் பிலிப்ஸ் 25 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் விளாசிய நிலை​யில் ரஷித் கான் பந்​தில் போல்டானார். 3-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 74 ரன்​கள் சேர்த்​தது.