
சென்னை: பிப்ரவரி 9-
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.15,000 அதிகரித்துள்ளது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.9) காலை வர்த்தகம் தொடங்கியதும் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,200-க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல 24 காரட் சுத்த தங்கம் பவுனுக்கு ரூ.2,008 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,27,856-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,360 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,00,160-க்கு விற்பனை ஆகிறது.வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.300-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து, ரூ.3,00,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.20 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.6,091-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், ஆபரணத் தங்கம் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.














