பெங்களூரு: பிப்ரவரி 9-
பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ரெடிட் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ”பெங்களூரு பிரெஸ்டீஜ் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3.5 கோடியில் வீடு வாங்க நினைத்தேன். அதற்காக ரூ.1.5 கோடியை மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் நிறுவனப் பங்குகளை விற்று திரட்டிவிடலாம் என்று நம்பினேன்.ஆனால், 2 வாரங்களில் ஏற்பட்ட பங்குச் சந்தை சரிவு எனது கனவை சுக்குநூறாக்கி விட்டது. பங்குச்சந்தை வீழ்ச்சி ஒரு புறம் இருக்க, தற்போதைய பொருளாதாரச் சூழலில் எனது அதிக சம்பளம் தரும் வேலை அடுத்த 8 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்குமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற போதிய நம்பிக்கையற்ற சூழலில் வீடு வாங்குவது விவேகமான முடிவாக இருக்காது. எனவே, வீடு வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.ஐடி நகரமான பெங்களூருவில் நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினரிடையே நிலவும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக சமூக வலை தளவாசிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.












