ஓமன் அணியை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே

கொழும்பு, பிப். 10- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்​எஸ்சி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘பி’ பிரி​வில் உள்ள ஜிம்பாப்வே – ஓமன் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஓமன் அணி 19.5 ஓவர்​களில் 103 ரன்களுக்கு சுருண்​டது. அந்த அணி 7 ஓவர்​களில் 27 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் 5 விக்கெட்​களை பறி​கொடுத்​தது. கேப்​டன் ஜதிந்​தர் சிங் 5, ஹமத் மிர்சா 0, அமீர் கலீம் 5, கரண் சோனா​வாலே 0, வாசிம் அலி 3 ரன்​களில் நடையை கட்​டினர். சற்று தாக்குப்பிடித்து விளை​யாடிய விநாயக் சுக்லா 21 பந்துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும் சூஃப்​யான் மெஹ்மூத் 39 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும் நதீம் கான் 18 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 20 ரன்​களும் சேர்த்​தனர். ஜிம்​பாப்வே அணி தரப்​பில் ரிச்​சர்டு நகர​வா, பிளெஸ்​ஸிங் முச​ரா​பானி, பிராடு இவான்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்​தினர். 104 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 13.3 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 106 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. தொடக்க வீர​ரான பிரையன் பென்​னட் 36 பந்​துகளில், 7 பவுண்டரிகளு​டன் 48 ரன்​களும், விக்​கெட் கீப்​பர் பேட்ஸ்மேனான பிரண்​டன் டெய்​லர் 30 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 31 ரன்​களும் விளாசினர். முன்​ன​தாக தடிவ​னாஷே மரு​மானி 11 பந்​துகளில், 5 பவுண்டரி​களு​டன் 21 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். தியோன் மையர்ஸ் ரன் ஏதும் எடுக்​காமல் வெளியேறினார். கேப்​டன் சிகந்​தர் ராசா 5 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.
8 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்​பாப்வே அணி 2 புள்ளிகளை பெற்றது. ஆட்ட நாயக​னாக பிளெஸ்​ஸிங் முசரா​பானி தேர்வா​னார்​.