Home செய்திகள் தேசிய செய்திகள் நடு ரோட்டில் வாக்குவாதம்

நடு ரோட்டில் வாக்குவாதம்

டெல்லி: பிப்ரவரி 26-
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டில், இளைஞர் காங்கிரசார் சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் ஏற்கனவே சிலரை கைது செய்தனர். இந்நிலையில் சௌரப், சித்தார்த், அர்பாஸ் ஆகிய மூன்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை இமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்ரு பகுதியில் வைத்து நேற்று டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ஒரு மாநில போலீசார் மற்றொரு மாநிலத்திற்குச் சென்று ஒருவரைக் கைது செய்யும்போது, உள்ளூர் போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், டெல்லி போலீசார் இந்த விதியைப் பின்பற்றவில்லை. எனவே சிவில் உடையில் வந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மூவரை கைது செய்து, அவர்கள் தங்கிருந்த விடுதியின் சிசிடிவி உபகாரணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை எடுத்துச் சென்ற டெல்லி போலீசார் மீது சிம்லா போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர்.