ஈரான் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்

டெஹ்ரான்: மார்ச் 4-
ஈ​ரானில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் செயல்​படும் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகளை குறி​ வைத்து அமெரிக்க விமானப் படை​யின் அதிநவீன பி-2 போர் விமானங்​கள் தீவிர தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.
ஈரானின் பல்​வேறு பகு​தி​களில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகள் செயல்​படு​கின்​றன. இவை ஏவு​கணை நகரங்​கள் என்று அழைக்​கப்​படு​கின்​றன.
அமெரிக்​கா, இஸ்​ரேல் உளவுத் துறை​ தகவல்​களின்​படி ஈரான் தலைநகர் டெஹ்​ரான், கெர்​மன் ஷா, செம்​னான் உள்​ளிட்ட பகு​தி​களில் பூமிக்​கடி​யில் சுமார் 5 ஏவு​கணை ஆலைகள் செயல்​பட்டு வரு​வ​தாக தெரி​கிறது. அந்த ஆலைகளை போர் விமானங்​களில் இருந்து வீசப்​படும் சக்​தி​வாய்ந்த வெடிகுண்​டு​களால் அழிக்க முடி​யாது. சில நூறு அடி ஆழத்​துக்கு பூமியை துளைத்​துச் சென்​று, பின்​னர் வெடித்​துச் சிதறும் அதிநவீன வெடிகுண்​டு​களால் மட்​டுமே அழிக்க முடி​யும். அந்த வகையில் அமெரிக்​கா​விடம் ஜிபியு -57 என்ற சக்​தி​வாய்ந்த வெடிகுண்​டு​கள் உள்​ளன.
இந்த வெடிகுண்​டு​கள் பூமியை துளைத்​துச் சென்​று, வெடித்துச் சிதறும் தன்மை கொண்​டவை. 20.5 அடி நீளம், 2.6 அடி விட்​டம், 14,000 கிலோ எடை கொண்ட ஜிபியு -57 வெடிகுண்​டு​களை அமெரிக்காவின்
எப் – 16, எப் – 22, எப் – 35 உள்​ளிட்ட அதிநவீன போர் விமானங்​களால் சுமந்து செல்ல முடி​யாது.அமெரிக்க விமானப் படை​யின் பி-2 ரக போர் விமானத்​தால் மட்​டுமே ஜிபியு -57 வெடிகுண்​டு​களை சுமந்து செல்ல முடி​யும். ஒரு பி-2 போர் விமானத்​தில் 2 ஜிபியு -57 வெடிகுண்​டு​களை மட்​டுமே பொருத்த முடி​யும்.
ஈரான் ராணுவத்​தின் மிகப்​பெரிய பலமாக ஏவு​கணை​கள் விளங்​கு​கின்​றன. அந்த நாட்​டிடம் 300 கி.மீ. முதல் 3,000 கி.மீ. தொலைவு வரை பாயும் திறன் கொண்ட ஏவு​கணை​கள் உள்​ளன.
இந்த ஏவு​கணை​கள் மூல​மாக இஸ்​ரேல் மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் தொடர் தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது.
இதை முறியடிக்க ஈரானின் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகள் மற்​றும் சேமிப்பு கிடங்​கு​களை முழு​மை​யாக அழிக்க அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு உள்​ளது. இதற்​காக அமெரிக்​கா​வில் இருந்து நான்கு பி-2 போர் விமானங்​கள் வரவழைக்​கப்​பட்டு உள்​ளன.
172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட பி-2 போர் விமானங்​களை இஸ்​ரேல் மற்​றும் மத்​திய கிழக்​கில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்​களில் தரை​யிறக்க முடி​யாது.
அமெரிக்​கா​வின் மிசோரி​யில் உள்ள வொயிட்​மேன், குவாமில் உள்ள ஆண்​டர்​சன் விமானப்​ படைத் தளங்​களில் மட்​டுமே பி-2 போர் விமானங்​களை கையாள முடி​யும்.
இவை தவிர இந்​திய பெருங்​கடலில் அமெரிக்​கா, பிரிட்​டன் இணைந்து நிர்​வகிக்​கும் டியாகோ கார்​சியா தீவில் உள்ள விமானப் படைத் தளம், பிரிட்​டனின் குளோஸ்​டர்​ஷையர் விமானப் படைத் தளத்​தில் மட்​டுமே பி-2 விமானத்தை தரை​யிறக்க முடி​யும். ஆனால் இந்த விமானப் படைத் தளங்​களை அமெரிக்கா பயன்​படுத்த பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர் முதலில் அனு​மதி வழங்க மறுத்​த​தாக​வும், 48 மணி நேர கால ​தாமதத்​துக்​குப் பிறகு அனுமதி வழங்​கிய​தாக​வும் கூறப்​படு​கிறது.