ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம்: துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி

சென்னை: மார்ச் 4-
துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்​தமல்​லியை சேர்ந்த வைஜெயந்​தி: இந்​திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்​தது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. என்​னுடைய கணவர் துபா​யில் இருக்​கிறார்.
அவரும் அடுத்த விமானத்​தில், இங்கு வந்​து​விடு​வார். துபா​யில் வீடு​களின் மேலேயே, விமானங்​கள் பறந்து கொண்​டு, பயங்​கர​மான சத்​த​மாக இருந்​தது. 3 நாட்​களாக இரவில் தூங்க முடி​யாமல் தவித்​தோம். தற்​போது பத்​திர​மாக வந்து சேர்ந்​து​விட்​டோம். துபாய் விமான நிலை​யத்​தில் எந்​தப் பகு​தி​யில் தாக்​குதல் நடந்​தது என்று தெரிய​வில்​லை. ஆனால் பதற்​ற​மாக​வும், பரபரப்​பாக​வும் இருந்​தது. மின்​சா​ரத்தை தடை செய்​திருந்​தார்​கள். நாங்​கள் இருளி​லேயே​தான், தவித்​துக் கொண்​டிருந்​தோம். 3 நாட்​களுக்கு பிறகு விமானத்​தில் அமர்ந்​ததும், நிம்​ம​தி​யடைந்​தோம்.
துபாய்க்கு சுற்​றுலா சென்று சிக்​கிய கோயம்​பேட்டை சேர்ந்த கார்த்​திக்: குடும்​பத்​துடன் துபாய்க்கு சுற்​றுலா சென்​றோம். கடந்த 28-ம் தேதி சென்​னைக்கு திரும்ப, துபாயி​லிருந்து விமானத்​தில் டிக்​கெட் முன்​ப​திவு செய்​திருந்​தோம்.
அன்று மாலை, துபாய் விமான நிலை​யத்​துக்கு வந்​த​போது, போர் காரண​மாக விமானம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாகத் தெரி​வித்​தனர். இதனால் என்ன செய்​வது என்று தெரி​யாமல் தவித்​தோம். பின்​னர், துபாய் விமான நிலை​யத்​துக்கு அருகே உள்ள ஒரு ஓட்​டலில் தங்​கினோம்.
அன்று இரவு முழு​வதும் போர் விமானங்​கள் பறந்து கொண்​டிருந்​தன. ஆங்​காங்கே குண்​டு​கள், ஏவு​கணை​கள் வெடிக்​கும் சத்​தம் அதி​க​மாகக் கேட்​டது. இதனால் நாங்​கள் மிகுந்த அச்​சம் அடைந்​தோம்.
சென்னை திரும்ப ஒரு வாரம் ஆகும் என்று நினைத்​தோம். அதனால், துபாயி​லிருந்து மஸ்​கட் செல்ல திட்​ட​மிட்​டோம். அப்​போது தான் எமிரேட்ஸ் விமானம் சென்​னைக்கு புறப்​படு​வ​தாக அறி​விப்பு வந்​தது. அந்த விமானத்​தில் நாங்​கள் சென்​னைக்கு வந்​து​விட்​டோம்.
விமானத்​தில் எங்​களை நன்​றாக கவனித்​துக் கொண்​டனர். சுற்​றுலா சென்ற நாங்​கள் போர் சூழலில் சிக்​கியது மிக​வும் பயமாக இருந்​தது. ஒரு வழி​யாக பத்​திர​மாக சென்​னைக்​கு திரும்​பி​விட்​டோம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.