எரிபொருள் பற்றாக்குறை சமாளிக்க ஆலோசனை

புதுடெல்லி: மார்ச் 4-
மேற்கு ஆசி​யா​வில் போர் பதற்​றம் ஏற்பட்டுள்ளதால் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் கச்சா எண்​ணெய் டேங்​கர் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது.
இதனால் ஏற்​படக்​கூடிய எரிபொருள் பற்​றாக்​குறையைச் சமாளிப்ப​தற்​கான பல அவசர​கால நடவடிக்​கைகள் குறித்து டெல்லி​யில் உள்ள உயர் அதி​காரி​கள் தீவிர​மாக ஆலோ​சித்து வருகின்​றனர். குறிப்​பாக, உள்​நாட்​டுத் தேவையைப் பூர்த்தி செய்ய பெட்​ரோல் மற்​றும் டீசல் ஏற்​றும​தி​யைக் கட்டுப்படுத்துவது, ரஷ்​யா​வில் இருந்து கச்சா எண்​ணெய் இறக்கும​தியை அதி​கரிப்​பது, எல்​பிஜி சிலிண்​டர்​களுக்கு கட்டுப்பாடு விதிப்​பது போன்ற நடவடிக்​கைகளை இந்​தியா மேற்கொள்​ளலாம் என்று தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.இந்நிலையில் மத்​திய பெட்​ரோலி​யத் துறை அமைச்​சர் ஹர்​தீப் சிங் புரி எக்ஸ் தளத்​தில், ”நிலை​மையை உன்​னிப்பாகக் கண்காணித்து வரு​கிறோம். நாட்​டின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து அவசிய​மான நடவடிக்​கைகளும் எடுக்கப்படும். போதுமான அளவில் கையிருப்பு உள்ளதால் உடனடியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது” என பதிவிட்டுள்ளார்.