Home செய்திகள் தேசிய செய்திகள் “சக வீரர்​களு​டன் போட்டியிடுவதை விரும்​ப​வில்லை” – தொடர் நாயகன் சஞ்சு சாம்சன்

“சக வீரர்​களு​டன் போட்டியிடுவதை விரும்​ப​வில்லை” – தொடர் நாயகன் சஞ்சு சாம்சன்

அகம​தா​பாத், மார்ச் 10- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 321 ரன்​கள் குவித்த இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்​றார். அவர், மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான சூப்​பர் 8 சுற்று ஆட்​டத்​தில் 97* ரன்களும், இங்​கிலாந்​துக்கு எதி​ரான அரை​யிறுதி ஆட்டத்தில் 89 ரன்​களும், நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக இறு​திப் போட்​டி​யில் 89 ரன்​களை​யும் விளாசி அணி​யின் வெற்​றிகளில் முக்​கிய பங்கு வகித்​தார். தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்​சன் கூறியதாவது: ஒன்​றரை ஆண்​டு​களுக்கு முன்பு மேற்கிந்தியத் தீவு​களில் உலகக்​கோப்பையில் விளை​யாடிக்​கொண்​டிருந்த போதே, இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்​டும் என்று நான் சிந்​தித்​து, கற்​பனை செய்​து, பயிற்​சி​யும் எடுத்து வந்​தேன். ஆனால், நியூஸிலாந்து தொடருக்​குப் பிறகு என் கனவு​கள் அனைத்​தும் சிதைந்​து​விட்​ட​தாகவே கரு​தினேன். ஆனால், கடவுள் எனக்​காகத் தனிப்​பட்ட திட்​டங்​களை வைத்​திருந்​தார் என்று நினைக்​கிறேன். நியூஸிலாந்து தொடருக்​குப் பிறகு நான் முற்​றி​லும் உடைந்து போயிருந்​தேன், அந்த வலியை நான் அப்​படியே ஏற்​றுக்​கொண்​டேன். நான்கு முதல் ஐந்து நாட்​களுக்கு என்​னால் என் படுக்​கையை விட்டு நகரக்​கூட முடிய​வில்​லை. என்​னால் பேட்​டிங் செய்ய முடிய​வில்​லை. நான் ஒரு​வித​மான முடக்க நிலை​யில் இருந்​தேன். நான் மகிழ்ச்​சி​யாக இல்​லை, அதை என் நடத்​தை​யிலும் வெளிப்​படுத்​தினேன். எனக்​குக் கிடைத்த வாய்ப்​பு​களை நான் சரி​யாகப் பயன்​படுத்​த​வில்லை என்ற உண்​மையை ஏற்​றுக்​கொண்​டேன். எனக்கு நானே உண்​மை​யாக இருந்​தேன். அந்த உணர்ச்​சிகளு​டன் நான் போராட​வில்​லை, அதேசம​யம் நான் நம்​பிக்​கை​யுடன் இருப்​பது போல​வும் நடிக்​க​வில்​லை. அந்த உண்​மையை நான் ஏற்​றுக்​கொண்​ட​வுடன், என்​னால் ஓரளவு விரை​வாக மீண்டு வர முடிந்​தது. ஜிம்​பாப்வே போட்​டிக்கு முன்​பாக நான் கவுதம் கம்​பீரை உடற்​ப​யிற்சி கூடத்​தில் சந்​தித்​தேன். அப்​போது அவர் என்​னிடம், ‘சஞ்​சு, தயா​ராக இரு, அடுத்த போட்​டி​யில் நீ விளை​யாடப் போகிறாய்’ என்று கூறி​னார். அப்​போது என் மனதுக்​குள், ‘இப்​போது செயலில் காட்​டு​வோம். இதற்​காகத்​தான் நான் காத்​திருந்​தேன்’ என்று சொல்​லிக்​கொண்​டேன். அணி​யில் உள்ள எனது சக வீரர்​களு​டன் போட்​டி​யிடு​வதை நான் விரும்​புவ​தில்​லை. நாங்​கள் அனை​வரும் ஒரு பொது​வான இலக்​கிற்​காக இணைந்து போராடும்​போது​தான், என்​னால் சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்த முடிகிறது.