Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்

இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்

டெல்லி, மார்ச் 18- என்ஏஐ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சிறப்பு நடவடிக்கையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட ஏழு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகத் தீவிரவாத செயல்களில் ஈடுபடச் சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள புருலியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் மீது ஆயுதங்களை விட்டுச் சென்றது. இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் மர்மமான பாதுகாப்பு மீறல்களில் ஒன்றாக இது இருக்கிறது. லாட்வியாவைச் சேர்ந்த அன்டோனோவ் ஆன்-26 ரக விமானம் ஒன்று, ஏகே47 உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை வீசி சென்றது. இதற்கிடையே சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு வடகிழக்கு இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. குற்றச்சாட்டு இது தொடர்பாக உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட ஏழு பேரை என்ஏஐ கைது செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகத் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடச் சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைதல், அனுமதிச் சீட்டு இல்லாமல் மியான்மருக்குள் செல்வது, இனவாத ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், ஐரோப்பாவிலிருந்து பயங்கரவாதக் குழுக்களுக்கு டிரோன் விநியோகத்தை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஏழு பேர் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஏழு வெளிநாட்டினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர் கொல்கத்தா விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரியால் கைது செய்யப்பட்டார். உக்ரைனியர்களில் மூவர் லக்னோ விமான நிலையத்திலும், மற்ற மூவர் டெல்லி விமான நிலையத்திலும் பிடிபட்டனர். அனைவரும் டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் அவர்களை மூன்று நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.