Home செய்திகள் உலக செய்திகள் ஈரானின் இனிதான தாக்குதலில் ட்ரம்ப், நெதன்யாகு கருத்து வேறுபாடு

ஈரானின் இனிதான தாக்குதலில் ட்ரம்ப், நெதன்யாகு கருத்து வேறுபாடு

ஜெருசலேம்: மார்ச் 20 –
ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
“ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை செய்ய வேண்டாம் என நெதன்யாகுவிடம் நான் சொல்லி இருந்தேன்” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது.
ஈரான் பதிலடி​யாக சவுதி அரேபி​யா​வின் யான்பு துறை​க​முத்​தில் உள்ள அராம்கோ எண்​ணெய் நிறு​வனத்​தின் சாம்​ரெஃப் சுத்திகரிப்பு நிலை​யம் மீது நேற்று முன்​தினம் இரவு ட்ரோன் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. மேலும் கத்​தார், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள இயற்கை எரி​வாயு மையங்​கள் மற்​றும் குவைத்​தில் உள்ள 2 எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள் மீதும் தாக்​குதல் நடத்​தி​யது.
உலகின் மிகப் ​பெரிய எரி​வாயு வயலான தெற்கு பார்​ஸ், இந்​தியா உட்பட உலகளா​விய திரவ இயற்கை எரி​வாயு (எல்​என்​ஜி) விநியோகத்​தின் முது​கெலும்​பாக உள்​ளது. இதனால் இந்​தியா உட்பட பல நாடு​கள் நேரடி​யாகப் பாதிக்​கும். குறிப்பாக, எல்​என்​ஜி-க்காக இந்​தியா பெரிதும் கத்​தாரை சார்ந்​துள்​ளது. இந்​தி​யா​வின் எல்​பிஜி-​யில் சுமார் 80-85% கத்​தார் மற்​றும் சவுதி அரேபி​யா​வில் இருந்து வரு​கிறது. இந்​நிலை​யில், இந்த விநி​யோகத்​தில் நீண்ட கால பாதிப்பு ஏற்​பட்​டால் அது இந்​தி​யா​வில் கடும் தாக்​கத்தை ஏற்படுத்​தும்.
ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கப்​பல்போக்​கு​வரத்தை ஈரான் தடுத்​ததன் காரண​மாக, கச்சா எண்​ணெய் விநி​யோகம் ஏற்​கெனவே பாதிக்கப்​பட்டு உலகம் போராடி வரும் நிலை​யில், கச்சா எண்​ணெய் உற்​பத்தி ஆலைகளுக்கு ஏற்​படும் எந்​தவொரு சேத​மும் பல ஆண்டுகளுக்கு தாக்​கத்தை ஏற்​படுத்​தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நெதன்யாகு விளக்கம்:
இந்நிலையில், ஈரானின் இயற்கை எரிவாயு வயல் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “ஈரான் இனி யுரேனியம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க முடியாது. இந்த போரில் நாங்கள் வெற்றியை நோக்கி உள்ளோம். ஈரான் அழிவை நோக்கியுள்ளது. இப்போது ஈரான் மீதான எங்கள் தாக்குதல் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை உற்பத்தி மையங்கள் மீதுதான் உள்ளது. விரைவில் அதை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வருவோம். ‘என்ன செய்யலாம்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு யாரேனும் சொல்ல முடியுமா? அமெரிக்காவுக்கு எது நல்லதோ அதைத்தான் அவர் செய்வார். ஈரான் விவகாரத்தில் என்ன செய்கிறோம் என்பது தெளிவாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நாங்கள் மத்திய கிழக்கு பகுதியை பாதுகாக்கிறோம். இதன் மூலம் உலகை பாதுகாக்கிறோம். இந்த உலகையே ட்ரம்ப்புக்கு கடமைப்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தனித்தே தாக்குதல் நடத்தியது. மேற்கொண்டு தாக்குதலை தொடர வேண்டாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். அதன் பேரில் தாக்குதலை நிறுத்தி உள்ளோம்” என நெதன்யாகு தெரிவித்தார்.