Home மாவட்டங்கள் பெங்களூர் என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு

என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு

புதுச்சேரி: மார்ச் 21 –
புதுச்​சேரி என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு கடந்த ஒரு வார​மாக இழுபறி​யாக இருந்த நிலை​யில், என்​.ஆர்​.​காங்​கிரஸ் – பாஜக இடையே நேற்று சுமுக உடன்​பாடு ஏற்​பட்​டது. என்​.ஆர்​.​காங்​கிரஸ் 16 இடங்​கள், பாஜக 10 இடங்​கள், அதிமுக, லஜக தலா 2 இடங்​களில் போட்​டி​யிடுகின்றன.
புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) அரசு ஆட்​சி​யில் உள்​ளது. என்​ஆர்​.​காங்​கிரஸ் தலை​வரும், முதல்​வரு​மான ரங்​க​சாமி இக்​கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கிறார். புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து தரு​வது உள்​ளிட்ட விவ​காரங்​களில் மத்​திய அரசு மீது அதிருப்தி நில​விய​தால், இதே ​கூட்​ட​ணி​யில் ரங்​க​சாமி நீடிப்​பாரா என்ற சந்தேகம் எழுந்​தது. இந்த சூழலில், கடந்த மாதம் காரைக்​காலுக்கு வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை ரங்​க​சாமி சந்​தித்​து, என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொடர்​வதை உறுதி செய்​தார்.
இதைத் தொடர்ந்​து, சில நாட்​களுக்கு முன்பு புதுச்​சேரி வந்த பாஜக தேர்​தல் பொறுப்​பாள​ரான மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா, பாஜக மேலிடப் பொறுப்​பாளர் சுரானா ஆகியோர் ரங்​க​சாமி​யுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, என்​டிஏ கூட்​ட​ணி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸுக்கு 16 இடங்​கள், பாஜக மற்​றும் கூட்​டணி கட்​சிகளான அதி​முக, லட்​சிய ஜனநாயகக் கட்​சிக்கு 14 இடங்​கள் என்று முடி​வானது.
இந்த நிலை​யில், லாட்​டரி அதிபர் மார்ட்​டினின் மகன் ஜோஸ் சார்​லஸின் லட்​சிய ஜனநாயகக் கட்​சி, என்​டிஏ அரசை விமர்​சித்​த​தால், அக்​கட்​சியை கூட்​ட​ணி​யில் சேர்க்​கக் கூடாது என்று ரங்​க​சாமி எதிர்ப்பு தெரி​வித்​தார். அதே நேரம், பாஜக அமைச்​சர் ஜான்​கு​மார் அக்​கட்​சி​யுடன் இணைந்து செயல்​பட்டு வரு​வ​தாக​வும், லஜக வளர்ச்​சிக்கு பாஜக உறு​துணை​யாக இருப்​ப​தாக​வும் விமர்​சனம் எழுந்​தது.
இந்த அதிருப்​தி​யால், தொகு​திப் பங்​கீட்டு பேச்​சு​வார்த்​தையை ரங்​க​சாமி கடந்த சில நாட்​களாக தவிர்த்​தார். தனது அதிருப்​தியை கட்சி நிர்​வாகி​கள் மூலம் பாஜக தலை​மைக்​கும் தெரியப்​படுத்​தி​னார். இதைத் தொடர்ந்​து, தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைக்​காக, மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா கடந்த 19-ம் தேதி மீண்​டும் புதுச்​சேரிக்கு வந்​தார். ஆனால், அதை புறக்​கணிக்​கும் வித​மாக, மதுரை, திருச்​செந்​தூரில் சுவாமி தரிசனம் செய்​வதற்​காக ரங்​க​சாமி புறப்​பட்​டுச் சென்​றார். இதனால், கூட்​ட​ணி​யின் மற்ற கட்​சி​யினருடன் மன்​சுக் மாண்​ட​வியா பேச்​சு​ நடத்​தி​னார். ரங்​க​சாமியின் வரு​கைக்​காக காத்​திருந்​தார்.