
புதுடெல்லி: மார்ச் 21 –
தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேச உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அன்புமணியின் பாமக அணி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல கட்சிகள் உள்ளன. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இந்த கூட்டணி செயல்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. நேற்று முன்தினம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். 4 நாட்களில் தொகுதி பங்கீடு அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘’இன்னும் 4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்’’ என்று கூறினார். இந்நிலையில் தான் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். அமித்ஷா – அன்புமணி – டிடிவி இந்நிலையில் தான் இன்று காலையில் அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து அமித்ஷாவை சந்தித்த பேச உள்ளனர். இந்த வேளையில் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக அவர்கள் தனித்தனியாக விவாதிக்க உள்ளளனர். டிடிவி தினகரன் பாஜக வழியாக தான் அதிமுகவிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
அதன்படி முதற்கட்ட தகவலின்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 9 தொகுதிகள், பாஜக 30+ தொகுதிகளில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
















