Home விளையாட்டு கவாஸ்கர் ஆவேசம்

கவாஸ்கர் ஆவேசம்

மும்பை, மார்ச் 23- ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் சிலர் இந்த ஆண்டு தாமதமாக வருவதைக் கண்டித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட வீரர்களை அணி உரிமையாளர்கள் தயவுதாட்சண்யமின்றி நீக்க வேண்டும் என்று அவர் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் பணிச்சுமை மற்றும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதுதவிர மேலும் சில வெளிநாட்டு வீரர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தாமதமாகவே அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.