Home செய்திகள் உலக செய்திகள் மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை

மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை

நியூயார்க், மார்ச் 23- மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடு இன்றுடன் முடிகிறது. ‘Peace through Strength’ (வலிமை மூலம் அமைதி) என்ற தனது தாரக மந்திரத்தை ட்ரம்ப் ட்விட்டரில் (தற்போது X) பதிவிட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஈராக்… உக்ரைன்… அடுத்து ஈரானா? ட்ரம்ப் வைக்கும் ‘செக்’ – உலகப்போர் வாசலில் மனிதாபிமானம்! “மரியாதையா வழியை விடு… இல்லையென்றால் வழியே இல்லாமல் செய்துவிடுவேன்!” – இதுதான் இப்போது வாஷிங்டனில் இருந்து தெஹ்ரானுக்குப் பறந்து கொண்டிருக்கும் ‘அல்டிமேட்டம்’ செய்தி. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கை, இப்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ள நிலையில், “இன்று மாலைக்குள் அதைத் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும்” என ட்ரம்ப் கர்ஜித்திருக்கிறார்.