
பெங்களூரு: மார்ச் 23-
அதிவேகமாகச் சென்ற பஸ் ஒன்று சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதில், 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை பெங்களூரு-மைசூர் நெடுஞ்சாலையில், சென்னப்பட்டணா தாலுக்காவில் உள்ள புட்டப்பனதொட்டி அருகே நிகழ்ந்தது. உயிரிழந்தவர்கள் கேரளாவைச் சேர்ந்த முகமது பரன் (22), ரபீஸ் (45), ரஷீத் (45) மற்றும் சாகிர் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவிலிருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த பி.கே. டிராவல்ஸ் பேருந்தின் ஓட்டுநர் உறங்கிக் கொண்டிருந்தபோது, சன்னப்பட்டணா தாலுக்காவில் உள்ள புட்டப்பனதொட்டி அருகே சாலைத் தடுப்புச் சுவரில் மோதினார். மோதலின் வேகத்தால் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷயம் தெரியவந்தவுடன், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீராக அனுமதித்தனர்.
இந்த விபத்தில் ஆலிஸ் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னபட்டணா போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது தற்போது தெரியவில்லை.
















