
டெல்லி: மார்ச் 25-
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தான் ஈரானிடம் இருந்து 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நம் நாட்டின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் கடந்த 2019ம் ஆண்டு நம் நாடு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திய நிலையில் தற்போது ரிலையன்ஸ் முதல் முறையாக 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஈரானிடம் இருந்து வாங்கியுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுப்பதால் இந்தியா உள்பட பல நாடுகளில் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பது தான். உலகளவில் தினமும் நடக்கும் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையில் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும்.


















