Home செய்திகள் தேசிய செய்திகள் ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்?

ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்?

டெல்லி: மார்ச் 25-
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு நடுவே தான் ஈரானுக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சாத்தியாகும் பட்சத்தில் இந்தியா – ஈரான் இடையே மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடங்கும். இதன்மூலம் ஈரானும், நம் நாடு பெரிய அளவில் பயன்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம். ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுத்து வருகிறது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மீதான விலைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் போருக்கு நடுவே அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்தார். கச்சா எண்ணெய் மீதான தடை நீக்கம் அதன்படி ஈரானின் கச்சா எண்ணெய் கொள்முதல் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்குவதாக அறிவித்தது. ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடை ஒரு மாத காலம் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 140 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் ஈரான் விற்க முடியும். இருப்பினும் இது கப்பலில் ஏற்றி வைத்துள்ள கச்சா எண்ணெய்களுக்கு மட்டுமே பொருந்தும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மத்திய அரசு வாங்க திட்டம் இந்நிலையில் தான் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா மீண்டும் தொடங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை அமெரிக்கா தளர்த்தி உள்ளதால் அதனை பயன்படுத்தி அந்த கச்சா எண்ணெய்களை வாங்க இந்தியா பரிசீலனை செய்து வருகிறது.