
டெஹ்ரான், மார்ச் 25- மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 5 நாள் போர் நிறுத்தம் குறித்து அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையிலும், தாக்குதல்கள் குறையாததால் அப்பகுதியில் நிலைமை மேலும் பதற்றமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தற்போது நான்காவது வாரத்திற்குள் நுழைந்துள்ள நிலையில்,
இரு தரப்பும் தொடர்ந்து கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டெஹ்ரான் நகரில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக டெல் அவிவ் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்கள் அதிகாலை நேரத்தில் தொடங்கி இடைவிடாமல் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில், சுமார் 100 கிலோ வெடிபொருள் நிரப்பப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை மீறி டெல் அவிவ்-ல் விழுந்து வெடித்தது. ஈரான் இஸ்ரேல் போர் இதனால் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், இந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, சவூதி அரேபியா மற்றும் Bahrain நாடுகளின் வான்வெளிக்குள் ஈரானின் ட்ரோன்கள் ஊடுருவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த நாடுகளிலும் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா அதிபர் டொனால்ட், ஈரான் மீது எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படவிருந்த தாக்குதலுக்கான காலக்கெடுவை 5 நாட்களுக்கு ஒத்திவைத்ததாக முன்பே அறிவித்திருந்தார். அதே நேரத்தில், அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தை குறித்து பேசியாலும், மத்திய கிழக்கு பகுதிக்குத் தனது கடற்படை மற்றும் ராணுவப்படைகளை அதிக அளவில் அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


















