
சிட்னி, மார்ச் 26- 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.63 பில்லியன் டாலர் அதாவது சுமார் 15,308 கோடி ரூபாய் தொகைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கல் சோமானி தலைமையிலான முதலீட்டுக் குழுவிற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான விற்பனை மூலம் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் சொத்து மதிப்பு அவர் இறந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமான போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் என முழு பொறுப்பையும் ஷேன் வார்னே ஏற்றார். அப்போது அவருக்கு 6,57,000 டாலர் அதாவது தற்போதைய மதிப்பில் 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.





















