Home செய்திகள் தேசிய செய்திகள் 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு

6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு

புதுடெல்லி: மார்ச் 26
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருபுறம் ஈரானை தாக்கிக் கொண்டிருக்க பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் போர் அந்த ஒரு நாட்டை மட்டும் பாதிக்கவில்லை சுற்றி இருக்கக்கூடிய மேற்காசிய நாடுகள் அனைத்தையுமே பாதித்திருக்கிறது. அதைத் தாண்டி ஆசிய நாடுகளில் எல்பிஜி தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் லாக்டவுன் போன்ற ஒரு சூழலே அறிவிக்கப்பட்டு விட்டது. ஈரான் போர் நீடிக்கும் பட்சத்தில் அடுத்ததாக பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் என்ற அச்சம் நீடிக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் எனர்ஜி லாக்டவுன் போன்ற சூழல்கள் கூட வரலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கான இந்தியர்கள் கலக்கமடைந்தனர். ஒரு லாக்டவுனில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்த லாக்டவுனா என மக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். ஆனால் இனி அந்த அச்சம் இல்லை. ஏனேனில் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஈரான் ஒரு நல்ல செய்தியை அறிவித்திருக்கிறது. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தங்களின் நட்பு நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்களை கொண்டு செல்ல அனுமதிப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அராக்சி, ஈரானின் தங்களின் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா , இந்தியா , ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த அனுமதி தந்திருக்கிறோம் என அறிவித்திருப்பதாக கூறி இருக்கிறது.எனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீனா , ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாட்டு கொடி ஏந்திய கப்பல்கள் பாதுகாப்பாக இனி கடந்து வர முடியும். அந்த வகையில் இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த செய்தியாக இருக்கிறது. ஒருபுறம் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது மறுபுறம் கச்சா எண்ணெய் வரத்து நின்று போயிருக்கிறது. இத்தகைய சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு பிரச்சனைக்கு ஒரு பெரிய தீர்வாக அமையும்.