Home செய்திகள் தேசிய செய்திகள் பிரான்ஸ் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பு

பிரான்ஸ் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பு

புதுடெல்லி: மார்ச் 27-
சக்​தி​வாய்ந்த ஜி7 நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்​டுக்கு பயணம் மேற்​கொண்​டார்.
மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர் பதற்​றத்​தைத் தணிப்​பது மற்​றும் சர்வ​தேச வர்த்​தகத்​துக்​கான கடல்​சார் பாதையான ஹார்​முஸ் ஜலசந்​தியை எவ்​விதத் தடையுமின்றி இயக்​கு​வது குறித்து இந்த மாநாட்​டில் விரிவாக ஆலோ​சிக்​கப்பட உள்​ளது.
இந்த சக்​தி ​வாய்ந்த ஜி7 கூட்​டமைப்​பில் இந்​தியா உறுப்பின​ராக இல்​லாத​போ​தி​லும், தற்​போதைய தலை​மைப் பொறுப்பை ஏற்​றிருக்​கும் பிரான்ஸ் நாட்​டின் அழைப்​பின் பேரில் ‘கூட்​டணி நாடு’ என்ற அந்​தஸ்​தில் இந்​தியா அதில் பங்​கேற்​கிறது. அமெரிக்​கா, கனடா, ஜெர்​மனி, இத்​தாலி, பிரான்​ஸ், ஜப்​பான் மற்​றும் பிரிட்​டன் ஆகிய நாடு​களின் உயர்​மட்ட அதி​காரி​கள் இக்​கூட்​டத்​தில் கலந்​து​கொள்​கின்​றனர்.பிரான்​ஸின் அபே டெஸ்​-​வாக்​ஸ்​-டி-செர்னே பகு​தி​யில் மாா்ச் 26, 27 ஆகிய தேதி​களில் நடை​பெறும் இக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கும் அமைச்​சர் ஜெய்​சங்​கர், இதர நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​களு​டன் இருதரப்பு உறவு​கள் குறித்​தும் பேச்​சு​வார்த்தை நடத்​து​வார் என்று அதி​காரப்​பூர்​வ​மாகத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வுடன் சேர்த்து சவூதி அரேபி​யா, தென் கொரியா மற்​றும் பிரேசில் ஆகிய நாடு​களுக்​கும் பிரான்ஸ் அழைப்பு விடுத்​துள்​ளது குறிப்பிடத்​தக்​கது.