Home செய்திகள் தேசிய செய்திகள் அசாமில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா ஹிமந்த பிஸ்வா

அசாமில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா ஹிமந்த பிஸ்வா

குவாஹாட்டி: மார்ச் 27-
அசாம் மாநில சட்​டப்​பேர​வை​யிலுள்ள 126 தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 9-ம் தேதி தேர்தல் நடை​பெறவுள்​ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அசாமின் வெற்​றிகர​மான முதல்​வ​ராக வலம் வரு​கிறார்.
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று ஆட்​சி​யமைக்க 65 தொகு​தி​கள் தேவை. இந்​தத் தேர்​தலில் முக்​கிய பிரச்​சா​ர​மாக கடந்த ஆண்டு மர்​ம​மான முறை​யில் இறந்த பிரபல பாடகர் ஜூபின் கார்​கின் விவ​காரம் உள்​ளது. இரு கட்​சிகளுமே அந்​தப் பிரச்​சா​ரத்தை முன்​னெடுத்து வரு​கின்​றன.
அது​மட்​டுமல்​லாமல் பாஜக மேலிடம் `ஜதி மதி பேட்​டி’ என்ற பிரச்​சா​ரத்​தைக் கையில் எடுத்​துள்​ளது. இது அசாம் மாநிலத்​தில், பெரும்​பாலும் சட்​ட​விரோதக் குடியேற்​றத்தை எதிர்த்​துப் போராடும் சூழலில், அங்​குள்ள பூர்​வீக மக்​களின் கலாச்​சார அடை​யாளம், நில உரிமை​கள் மற்​றும் தங்​கள் வீடு​களின் மீதான நியாய​மான உடைமை ஆகிய​வற்​றைப் பாது​காப்​பதை வலி​யுறுத்​து​வதற்​காகப் பயன்​படுத்​தப்​படும் ஓர் அரசி​யல் முழக்​க​மாகும். அந்த முழக்​கத்தை முன்​னெடுத்து வாக்கு வேட்​டை​யாடி வரு​கிறது பாஜக.
அதே​நேரத்​தில், அசா​முக்கு புதிய தலைமை வேண்​டும். அசாம் முழு​வதுமே பாஜக​வுக்கு எதி​ரான அலை காணப்​படு​வ​தாக தனது பிரச்​சா​ரத்​தில் கூறி வரு​கிறார் கவுரவ் கோகோய். முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டுள்​ளார். அதே​நேரத்​தில் அவருக்​குப் போட்​டி​யாக களத்​தில் இறங்கி கடும் சவால் அளித்து வரு​கிறார் கவுரவ் கோகோய். இந்​தத் தேர்​தலில் தனி மெஜாரிட்​டி​யுடன் ஆட்​சி​யமைக்க பாஜக மேலிடம் தீவிர பிரச்​சா​ரத்​தில் தலை​வர்​களை இறக்கி விட்​டுள்​ளது. அதே​நேரத்​தில் காங்​கிரஸ் மேலிடம், இழந்த அதி​காரத்தை மீண்​டும் கைப்​பற்​று​வதற்கு தீவிர முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. முதன்​முறை​யாக கவுரவ் கோகோய் சட்​டப் பேர​வைத் தேர்​தலில் களமிறங்​கி​யுள்​ளார். இது காங்​கிரஸ் தொண்​டர்​களுக்கு உற்​சாகத்​தைக் கொடுத்​துள்​ளது.