Home செய்திகள் தேசிய செய்திகள் கேரள தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கும் ஏஐ

கேரள தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கும் ஏஐ

திருவனந்தபுரம்: மார்ச் 28 கேரளா​வில் அடுத்த மாதம் 9-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், அங்கு தேர்​தல் பிரச்​சா​ரம் சூடு​பிடித்​துள்​ளது. தற்​போது மக்​கள் செல்​போன்​களில் மூழ்கி கிடப்​ப​தால், வாக்​காளர்​களை கவர கம்​யூனிஸ்ட் , காங்​கிரஸ் மற்​றும் தே.ஜ கூட்​டணி கட்​சிகளின் ஐ.டி பிரிவு​கள், ஏஐ தொழில்​நுட்​பத்​துடன் கூடிய டிஜிட்​டல் பிரச்​சார தகவல்​களை உரு​வாக்​கு​வ​தில் மும்​முர​மாக உள்​ளன.
பாஜக மற்​றும் தேசி​யக் கொடிகளை ஏந்​தி​யபடி மக்​கள் வெள்​ளம் சூழ, ஜீப் ஒன்​றின் மீது ஏறி நின்று ஒரு அரசி​யல் தலை​வர் கையசைத்​த​படி பிரச்​சா​ரத்​தில் செல்​கிறார்.
இது பிரதமர் மோடியோ அல்​லது உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவோ பங்​கேற்​கும் தேர்​தல் பிரச்​சா​ரம் அல்ல.
கேரளா​வின் எர்​ணாகுளம் சட்​டமன்​றத் தொகு​தி​யில் போட்​டி​யிடும் பாஜக வேட்​பாளர் பி.ஆர். சிவசங்​கரின் பிரச்​சார வீடியோ​தான் அது. அவர் ஒரு பிரம்​மாண்​ட​மான ஊர்​வலத்தை வழிநடத்​திச் செல்​வது போல​வும், ஆண்​கள், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் வீதி​களில் திரண்டு இந்​திய தேசி​யக் கொடி மற்​றும் பாஜக கொடிகளு​டன் வரவேற்​பது போல​வும்
ஏஐ தொழில்​நுட்​பத்​தில் காட்​சிகள் தத்​ரூப​மாக​வும், நம்​பத்​தகுந்த வகை​யிலும் இருக்​கின்​றன.அங்​க​மாலி தொகுதி காங்​கிரஸ் வேட்​பாள​ரும், தற்​போதைய எம்​.எல்​.ஏ-வு​மான ரோஜி எம். ஜான் கூறுகை​யில், “கட்​சி​யின் கருத்​துக்​களை மக்​களிடம் கொண்டு சேர்க்க ஏஐ வீடியோக்​களைப் பயன்​படுத்​துகிறோம்” என்​றார்.