Home செய்திகள் தேசிய செய்திகள் யாருக்கு அடிக்கப் போகுது ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரி குலுக்கல்

யாருக்கு அடிக்கப் போகுது ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரி குலுக்கல்

திருவனந்தபுரம், மார்ச் 28- கேரளாவில் ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெறுகிறது. கேரளாவில் கடந்த இரு மாதங்களாக சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை சூடு பறக்க நடந்து வந்தது. முதல் பரிசு ரூ. 10 கோடி என்பதால் யாருக்கு இவ்வளவு பெரிய தொகை அடிக்கப் போகின்றதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிர்ஷ்டம் என்பது எதில் பொருந்துகிறதோ இல்லையோ, லாட்டரிக்கு பொருந்தும். லாட்டரியில் பரிசு யாருக்கு அடிக்கும், எப்போது அடிக்கும் என சொல்ல முடியாது. பல வருடங்களாக விடாமல் லாட்டரி சீட்டுக்கள் வாங்கி இதுவரை ஒருமுறை கூட பரிசு அடிக்காதவர்களும் உள்ளனர்,
வாங்கிய ஒரே சீட்டில் பரிசு அடித்தவர்களும் உண்டு. இன்று குலுக்கல் கேரளாவை பொறுத்தவரை அரசே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், வருடத்திற்கு 6 சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான கேரள சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. கேரள லாட்டரி பிரியர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெறுகிறது. கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்கு நடுவிலும் அங்கு சம்மர் பம்பர் டிக்கெட்டின் விற்பனை களை கட்டி வந்தது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 ஆகும். ரூ.10 கோடி யாருக்கு? முதல் பரிசாக ரூ.10 கோடியும் இரண்டாவது பரிசாக ரூ.1 கோடியும் அளிக்கப்படுகிறது. முதல் பரிசாக 10 கோடி அளிக்கப்படுவதால் வாழ்க்கையில் நமக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை ஆர்வத்துட்ன் வாங்கி வருகிறார்கள். மொத்தம் 40 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.