Home செய்திகள் தேசிய செய்திகள் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு விலை உயர்வு

தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு விலை உயர்வு

சென்னை: மார்ச் 30 – ​
காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால், கள்​ளச்​சந்​தை​யில் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர்​களை பல ஆயிரம் ரூபாய் கூடு​தலாகக் கொடுத்து வாங்​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஓட்​டல்​களில் தேநீர், சிற்​றுண்​டி, சாப்​பாடு உள்​ளிட்​ட​வற்​றின் விலை கணிச​மாக அதி​கரித்​துள்​ளது.
மத்​தி​யக் கிழக்​கில் போர்ப் பதற்​றம் நீடிக்​கிறது. இதனால் ஈரானின் கடல்​வழி போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டு இந்​தி​யா​வில் எல்​பிஜி காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர் விநி​யோகிக்​கப்​படும் நிலை​யில், வணி​கப் பயன்​பாட்டு சிலிண்​டர் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மருத்​து​வ​மனை, கல்வி நிறு​வனங்​களுக்கு மட்​டும் முன்​னுரிமை அடிப்​படை​யில் காஸ் சிலிண்​டர் வழங்​கப்​படு​கிறது.
வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் நிறுத்​தப்​பட்​ட​தால், பெரும்​பாலான இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன. சிலர் விறகு அடுப்​பைப் பயன்​படுத்​துகின்​றனர். காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் உணவகங்​கள், தேநீர் கடைகள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. பல இடங்​களில் தேநீர் மற்​றும் சிற்​றுண்டி விலை அதி​கரித்​துள்​ளது.சில கடைகள் வணிக சிலிண்​டர்​கள் கிடைக்​காமல் வீட்டு உபயோக சிலிண்​டரை நம்பி இருக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. நுங்​கம்​பாக்​கம், வடபழனி, அடை​யாறு, தி.நகர், வேளச்​சேரி உள்​ளிட்ட பகு​தி​களில் பல சாலை​யோர உணவகங்​கள் மற்​றும் தேநீர் கடைகளில் வணிக சிலிண்​டர்​கள் கிடைக்​க​வில்லை என்று அறி​விப்​புப் பலகைகள் வைக்​கப்​பட்​டுள்​ளன.
நுங்​கம்​பாக்​கம், சூளைமேட்​டில் ஒரு கப் தேநீரின் விலை ரூ.12-ல் இருந்து ரூ.20 ஆக உயர்ந்​துள்​ளது. தாம்​பரத்​தில் ரூ.20-க்கு விற்​பனை செய்​யப்​பட்ட தேநீர் தற்​போது ரூ.25 ஆக விலை உயர்ந்​துள்​ளது. அடை​யாறில் சமோ​சா, பஜ்ஜி, போண்டா போன்ற சிற்​றுண்​டிகள் விலை ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்​துள்​ளது. கலவை சாதம் விலை​யும் உயர்ந்​துள்​ளது. உணவகங்​களில் சாப்​பாட்​டுக் கட்​ட​ணத்​துடன் காஸ் சிலிண்​டர் கட்​ட​ணத்​தைச் சேர்த்து வாடிக்​கை​யாளர்​களிடம் வசூலிக்​கின்​றனர்.