
வடோதரா: மார்ச் 30-
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் 103 வயதான பாட்டி காஷிபா. மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்துக்கு அருகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார்.
இப்போது அவரது மகன், மருமகள் கடையை நடத்தினாலும் காஷிபா தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்தப் பாட்டி இஞ்சியைத் துருவி தேநீர் தயாரிப்பதைக் காணலாம். பல தலைமுறை மாணவர்களை ஈர்த்த அவரது இஞ்சி தேநீரின் நறுமணம், இன்றும் வழிப்போக்கர்களை ஈர்த்து வருகிறது.

















