Home செய்திகள் தேசிய செய்திகள் கேரளாவில் 42 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டி

கேரளாவில் 42 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டி

திருவனந்தபுரம்: மார்ச் 30-
கேரளா​வில் ஆண்​களை விட பெண் வாக்​காளர்​கள் அதி​க​மாக இருந்த போதி​லும், தேர்​தல் களத்​தில் 42 பெண்​கள் மட்​டுமே உள்​ளனர்.இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் சமீபத்​திய தரவு​களின்​படி, கேரளா​வில் பெண் வாக்​காளர்​களின் எண்​ணிக்கை (1,39,21,868) ஆண்​களை விட (1,32,20,811) அதி​கம். ஆனால் இந்த முறை 42 பெண்​கள் மட்​டுமே முக்​கிய கட்​சிகளின் சார்​பில் வேட்​பாளர்​களாகக் களமிறக்​கப்​பட்​டுள்​ளனர்.பாஜக சார்​பில் 14, சிபிஐ(எம்) சார்​பில் 12, காங்​கிரஸ் சார்​பில் 9, சிபிஐ சார்​பில் 5, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் சார்​பில் (முதல் முறை​யாக) 2 பெண்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.இதுகுறித்து காங்​கிரஸ் எம்​எல்ஏ பி.சி.​விஷ்ணு​நாத் கூறும்​போது, ‘‘பெண்​களுக்கு அதிக இடம் கொடுக்​கத் தலைமை முயற்சி செய்​தா​லும், வெற்றி வாய்ப்பு உள்​ளிட்ட காரணங்​களால் கட்​டமைப்பு ரீதி​யான தடைகள் உள்​ளன’’ என்​றார். சிபிஐ (எம்) மூத்த தலை​வரும் அனைத்து இந்​திய மாதர் சங்க நிர்​வாகி​யு​மான பி.கே. ஸ்ரீமதி கூறும்​போது, ‘‘இடது​சாரி முன்​னணி பெண்​களுக்கு மொத்​தம் 18 இடங்​களை வழங்​கி​யுள்​ளது. இது எவ்​வகை​யிலும் போது​மானது அல்ல. தேர்​தலில் பெண்​களுக்​குக் குறை​வான இடங்​களே ஒதுக்​கப்​படு​வது வருத்​தமளிக்​கிறது’’ என்​றார்.