
அமராவதி: மார்ச் 31 –
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா என்கிற நாராயண ராவ். இவர் 1990-களில் நக்சலைட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசிய அளவில் அந்த இயக்கத்தில் முக்கிய நிர்வாகியாகவும், மூளையாகவும் செயல்பட்டு வந்தார்.இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால் கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும் என ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், சோமண்ணா உள்ளிட்ட பலர் ஆந்திர டிஜிபி முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். அப்போது ஏகே 47 உட்பட பல ஆயுதங்களை அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

















