Home செய்திகள் தேசிய செய்திகள் போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

புதுடெல்லி: மார்ச் 31 –
ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்​றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.
கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின், உயிர்க் காக்​கும் மருந்​துகளின் விநி​யோகம் தாமதப்​படு​வது மட்​டும் அல்​லாமல் அவற்​றின் விலைகளும் உயர்ந்து வரு​கின்​றன. இதனால் ஆசி​யா, ஆப்​பிரிக்கா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​கள் கடுமை​யாக பாதிக்​கப்​படும் அபா​யம் உள்​ள​தாக உலக சுகா​தார நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. குறைந்த வரு​மானம் உள்ள நாடு​கள் பல மருந்து பொருட்களுக்கு இறக்​கும​தி​யைச் சார்ந்தே உள்​ளன.
இந்​நிலை​யில் ஈரான் போர் நீடித்​தால், இங்கு மருந்து விநியோகம் கடுமை​யாக பாதிக்​கப்​படும் எனக் கூறப்படுகிறது. எரிபொருள் விலை அதி​கரிப்​பால் மருந்து விலை​யும் அதி​கரித்து வரு​கிறது. பல நாடு​களின் விமானப் போக்​கு​வரத்​துக்கு துபாய் மைய​மாக விளங்​கியது. இங்கு போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டுள்​ள​தால் மருந்​துகளின் விலை 30 சதவீதம் உயர்ந்​துள்​ள​தாக உலக சுகா​தார நிறுவனம் தெரி​வித்​துள்​ளது. அவசர​கால மருந்​துகள் பல வழிகளைச் சுற்றி அனுப்​பப் படு​கின்​றன. எரிபொருள் பற்​றாக்​குறை மருந்​துகளின் விநி​யோகத்தை தாமதப்​படுத்​தி​யுள்​ளது. காசா போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்​டிய மருந்​துகள் எல்​லாம் பல இடங்​களில் தேங்​கிக் கிடக்​கின்​றன. கேன்​சர் மருந்​துகள் உள்​ளிட்ட சில மருந்​துகளுக்கு குளிர்​சாதன வசதி தேவை. அதனால் ஈரான் போர் நீடித்​தால் இவற்​றின் விநி​யோகம் கடுமை​யாக பாதிக்​கும் என கூறப்​படு​கிறது.