Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூர் கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்

பெங்களூர் கரகத் திருவிழா – பக்தர்கள் குவிந்தனர்

பெங்களூரு, ஏப்ரல் 1:
பெங்களூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மராய சுவாமி கோவில் கரக திருவிழா இன்று (ஏப்ரல் 1, புதன்கிழமை) நள்ளிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. 800 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த விழா,திரௌபதி தேவியின் சக்தியைப் போற்றும் விதமாகத் திகழ்கிறது.மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புனித கரகத்தை ஞானேந்திரா சுமந்து வருகிறார். நள்ளிரவில் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. ஊர்வலம்திங்களார் பேட்டையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விடியற்காலை மீண்டும் கோவிலை வந்தடையும்.
மத நல்லிணக்கம்: இந்த ஊர்வலம் மஸ்தான் சாஹேப் தர்காவிற்குச் சென்று மரியாதை செலுத்துவது மத ஒற்றுமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
கையில் வாள் ஏந்திய வீரகுமாரர்கள் கரக ஊர்வலத்தைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள்.மைசூர் தசரா பாணியில் அலங்கார விளக்குகளும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் கரகத் திருவிழா முன்னிட்டு அந்த பகுதி முழுவதும் திருவிழா கோலம் போட்டுள்ளது