Home விளையாட்டு உலகக் கோப்பை தகுதி சுற்றில் தோல்வி: 3-வது முறையாக இத்தாலி வெளியேற்றம்

உலகக் கோப்பை தகுதி சுற்றில் தோல்வி: 3-வது முறையாக இத்தாலி வெளியேற்றம்

ஜெனிகா, ஏப்ரல் 2- பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்​கா, மெக்சிக்​கோ​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஐரோப்​பிய தகுதி சுற்​றின் பிளே ஆஃப் ஆட்டங்​கள் நேற்று நடை​பெற்​றன. இதில் போஸ்​னி​யா​வில் உள்ள ஜெனிகா நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 4 முறை சாம்​பிய​னான இத்​தாலி, தரவரிசை​யில் 66-வது இடத்​தில் உள்ள போஸ்​னியா மற்றும் ஹெர்​சகோ​வினா அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்தி​யது. 15-வது நிமிடத்​தில் இத்​தாலி அணி​யின் மொயீஸ் கீன் கோல் அடித்து அசத்​தி​னார். இதனால் அந்த அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. 41-வது நிமிடத்​தில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்​டோனிக்கு ரெட் கார்டு வழங்​கப்​பட்​டது. இதனால் இத்​தாலி அணி 10 வீரர்​களு​டன் விளை​யாடும் நிலைக்கு தள்​ளப்​பட்​டது. 79-வது நிமிடத்​தில் போஸ்னியா பதிலடி கொடுத்​தது. அந்த அணி​யின் வீரர் ஹாரிஸ் தபகோ​விச் கோல் அடிக்க ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது. நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 1-1 என சமநிலை​யில் இருந்​தது. இதையடுத்து கூடு​தலாக 30 நிமிடங்​கள் வழங்​கப்​பட்​டது. இதில் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் அடிக்​கப்​பட​வில்​லை. இதனால் வெற்​றியை தீர்​மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்​கப்​பட்​டது. இதில் போஸ்​னியா மற்​றும் ஹெர்​சகோ​வினா அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு தகுதி பெற்​றது. அந்த அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறு​வது இது 2-வது முறை​யாகும். கடைசி​யாக அந்த கடந்த 2014-ம் முதன்​முறை​யாக உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் விளையாடி இருந்​தது. அதேவேளை​யில் இத்​தாலி அணி தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடி​யாமல் வெளி​யேறி உள்​ளது. அந்த அணி 2018 மற்​றும் 2022-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை தொடருக்​கும் தகுதி பெற இல்​லை. 1934, 1934, 1982 மற்​றும் 2006-ம் ஆண்​டு​களில் சாம்​பியன் பட்​டம் வென்ற இத்​தாலி அணி தற்​போதைய தோல்​வி​யால் கால்​பந்​தின் மிகப்​பெரிய திரு​விழா​வில் 16 ஆண்​டு​களாக நுழைய முடி​யாமல் தவிப்பு நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. மற்ற ஆட்​டங்​களில் சுவீடன் 3-2 என்ற கோல் கணக்​கில் போலந்து அணி​யை​யும், துருக்கி 1-0 என்ற கோல் கணக்​கில் கோசோவோ அணி​யை​யும் தோற்​கடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றன.துருக்கி அணி 2002-ம் ஆண்​டுக்கு பிறகு தற்​போது​தான் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுகிறது. செக் குடியரசு – டென்​மார்க் அணி​கள் மோதிய ஆட்​டம் நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​கள் 1-1 சமனில் முடிந்​தது.