Home செய்திகள் உலக செய்திகள் போரினால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? ஈரான் அதிபர் கேட்ட கேள்வி

போரினால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? ஈரான் அதிபர் கேட்ட கேள்வி

தெஹ்ரான், ஏப்ரல் 2- மத்திய கிழக்கில் போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக இஸ்ரேலுக்காகவே இந்த போரில் அமெரிக்கா ஈடுபடுவதாகச் சாடிய பெசெஷ்கியன், இதில் அமெரிக்காவுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஆரம்பித்த போர் சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த போர் ஓரிரு வாரங்களிலேயே முடிந்துவிடும் என்றே பலரும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் பாதிப்புகள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஈரான் அதிபர் கேள்வி நடுவே போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தை நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் ஈரான், போர் ஆரம்பித்தது முதல் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனக் கூறி வருகிறது. இதற்கிடையே அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இஸ்ரேல் சொல்வதைக் கேட்கும் டிரம்ப் மத்திய கிழக்கில் இப்போது டிரம்ப் நடத்தி வரும் மோதல் உண்மையாகவே அமெரிக்காவின் நலன்களுக்கு தானா எனக் கேள்வி எழுப்பினார். அமெரிக்கா போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாகச் சாடிய பெசெஷ்கியன், இஸ்ரேல் சொல்வதைக் கேட்டே அமெரிக்கா செயல்பட்டு வருவதாகவும் சாடினார். தனது சமூக வலைத்தளத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ள பெசெஷ்கியன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.