Home செய்திகள் உலக செய்திகள் 11 முறை குலுங்கிய இந்தோனேசியா

11 முறை குலுங்கிய இந்தோனேசியா

ஜகர்தா: ஏப்ரல் 2-
இந்தோனேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் சரிந்த விழுந்திருக்கின்றன. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக, இந்தோனேசியா சுமார் 11 முறை குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய BMKG தலைவர் தேகூ பைசல் ஃபதானி, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 11 பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அவற்றுள் மிகப்பெரியது 5.5 ரிக்டர் அளவுகொண்டது என்றும் தெரிவித்தார்.சுமார் 4,50,000 மக்கள் வாழும் மனாடோவில், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து AFP செய்தியாளர் கூறுகையில், “நிலநடுக்க அதிர்வு என்னை போலவே மக்கள் பலரையும் தூக்கத்திலிருந்து எழுப்பியது. கட்டிடங்களிலிருந்து பள்ளி மாணவர்கள் முதலில் அவசரமாக வெளியேறினர். அவர்களை தொடர்ந்து நாங்கள் அனைவரும் வெளியேறினோம். நீண்ட நேரம் நீடித்த இந்த அதிர்வில், பெரிய சேதங்கள் ஏதும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.