Home செய்திகள் உலக செய்திகள் நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை

நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை

வாஷிங்டன்: ஏப்ரல் 2-
நேட்டோ ஒரு ‘காகிதப் புலி’ என்​றும் அதிலிருந்து வெளி​யேறு​வது பற்றி தீவிர​மாக பரிசீலிப்பதாக​வும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்​ளார். மேற்கு ஆசி​யப் போர் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடி​யுள்​ளது.
இதனால் உலகம் முழு​வதும் எரிபொருள் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு அதன் விலை உயர்ந்து வரு​கிறது. இந்​நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தியை திறப்​ப​தற்​கான முயற்​சி​யில் உலக நாடு​கள் இணைய வேண்​டும் என்​றும் இதற்​காக தங்​கள் நாட்டு போர்க்​கப்​பல்​களை அனுப்ப வேண்​டும் என்​றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்​தார். ஆனால், பிரிட்​டன் உள்​ளிட்ட ஐரோப்​பிய நாடு​கள் கூட இதைப் பொருட்​படுத்​த​வில்​லை. இதனால் ட்ரம்ப் கோபமடைந்​துள்​ளார்.
இந்​நிலை​யில், பிரிட்​டனின் டெய்லி டெலிகி​ராப் இதழுக்கு ட்ரம்ப் அளித்த பேட்​டி​யில், ‘‘ஈரானுக்கு எதி​ரான அமெரிக்கா​வின் ராணுவ நடவடிக்​கைக்கு நட்பு நாடு​கள் ஆதரவு அளிக்​கத் தவறிய​தால், நேட்டோ அமைப்​பிலிருந்து வெளி​யேறு​வது குறித்து தீவிர​மாகப் பரிசீலித்து வருகிறேன்’’ என்றார்.நேட்டோ கூட்​ட​ணியை ஒரு ‘காகிதப் புலி’ என்று வர்​ணித்த ட்ரம்ப், நேட்​டோ​வின் நம்​பகத்​தன்மை குறித்து தனக்கு நீண்​ட​கால​மாகவே சந்​தேகம் இருந்​த​தாக​வும் கூறி​னார். பிரிட்​டனின் போர்க்​கப்​பல் படை​யின் நிலையை நேரடியாகச் சாடிய ட்ரம்ப், ‘‘உங்​களிடம் ஒரு கடற்​படை கூட இல்​லை. நீங்​கள் மிக​வும் பழமை வாய்ந்​தவர்​கள், உங்களிடம் இருந்த விமானம் தாங்கி கப்​பல்​களும் வேலை செய்​ய​வில்​லை’’ என்​றார்.