Home மாவட்டங்கள் பெங்களூர் சாலைத் தடுப்பில் மோதிய பஸ் பயணிகள் தப்பினர்

சாலைத் தடுப்பில் மோதிய பஸ் பயணிகள் தப்பினர்

பெங்களூரு: ஏப்ரல் 2-
பெங்களூரில் இன்று காலை குமார கிருபா சாலையில் உள்ள சிவானந்தா சர்க்கிள் அருகே, அதிவேகமாகச் சென்ற ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சாலைத் தடுப்பில் மோதியது, நல்ல வேலையாக பயணிகள் உயிர் தப்பினர்.
ஆந்திரப் பிரதேசத்தின் அடோனியிலிருந்து அனந்தபுரம் வழியாக பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்து, இன்று காலை சாலைத் தடுப்பில் மோதியது. பேருந்தின் முன் சக்கரமும் இன்ஜினும் கழன்று விழுந்தன. நல்லவேளையாக, பயணிகள் விபத்தில் இருந்து தப்பினர், மேலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஹை கிரவுண்ட்ஸ் போக்குவரத்து போலீசார், தடுப்பில் சிக்கியிருந்த பேருந்தை அகற்றி, சீரான போக்குவரத்தை அனுமதித்துள்ளனர்.