Home செய்திகள் தேசிய செய்திகள் சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேரம்

சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேரம்

புதுடெல்லி: ஏப்ரல் 2-
சிறை​யில் 50 நாட்​கள், ஓட்​டலில் 25 நாட்​கள், பேருந்​தில் 19 மணி நேர பயணம் என இந்​தி​யர் ஒரு​வர் பல சிரமங்​களை எதிர்​கொண்டு தாயகம் திரும்​பி​யுள்​ளார்.
கடந்த ஆண்டு டிசம்​பர் 8ம் தேதி சட்​ட​விரோத​மாக டீசல் ஏற்​றிச் செல்​வ​தாக கூறி ‘எம்​.டி. வேலியன்ட் ரோர்’ என்ற எண்​ணெய் கப்பலை சர்​வ​தேச கடல் எல்​லை​யில் ஈரான் ராணுவம் சிறை பிடித்​தது. கப்​பலில் 16 இந்​தி​யர்​கள் உள்​ளிட்ட 18 ஊழியர்​கள் இருந்​தனர். இவர்​களில் 10 பேர் ஈரானின் பந்​தர் அப்​பாஸ் நகர சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்​திய தூதரகத்​தின தலை​யீட்டை தொடர்ந்து 50 நாள் சிறை வாசத்​துக்கு பிறகு இவர்​கள் விடுவிக்கப்பட்​டனர். இவ்​வாறு விடுவிக்​கப்​பட்​ட​வர்​களில் டெல்​லி​யின் புறநகர் பகுதியான காஜி​யா ​பாத்தை சேர்ந்த கேதன் மேத்​தா​வும் (37) ஒருவர். கடந்த ஞாயிற்​றுக் ​கிழமை காஜி​யா ​பாத் திரும்​பிய இவர் தனது திகிலூட்​டும் பயண அனுபவம் பற்றி கூறிய​தாவது: நாங்​கள் சிறையை விட்டு வெளி​யேறி, அங்​குள்ள ஒரு ஓட்​டலில் தங்கியபோது, போர் மூளப்​போவது குறித்து எங்​களுக்கு சிறிதும் தெரி​யாது. ஆனால் மறு​நாளே போர் வெடித்​தத​தால் நாங்​கள் முற்றி​லும் திகைத்​துப் போனோம். அனைத்​தும் மூடப்​பட்​டன. விமான நிலை​ய​மும் மூடப்​பட்​டது.நாங்​கள் தங்​கி​யிருந்த ஹோட்​டல் பந்​தர் அப்​பாஸ் துறை​முக நகரில் இருந்து வெறும் 600- 700 மீட்​டர் தொலை​விலேயே இருந்தது. இது ஈரானிய கடற்​படை​யின் முக்​கி​யத் தளம் என்பதால் போரின் தொடக்​கத்​தில் இருந்தே கடுமை​யாக தாக்கப்பட்டு வந்​தது.இதையடுத்து நாங்​கள் மேற்​கொண்ட பேருந்​துப் பயணம் இன்னும் ஆபத்து நிறைந்​த​தாக இருந்​தது. பந்​தர் அப்​பாஸில் இருந்து சுமார் 1,800 கி.மீ. பேருந்​தில் பயணம் செய்து ஆர்​மீனி​யாவை அடைந்​தோம். இதற்கு 18 முதல் 19 மணி நேரம் வரை ஆனது. வழியெங்​கும் குண்​டு​கள் விழுந்​து​கொண்​டிருந்​தன. இப்பயணம் முழு​வதும், சுற்​றி​யுள்ள மலைகளி​லிருந்து வெடிச்​ சத்தங்கள் எதிரொலித்​துக் கொண்டே இருந்​தன.பேருந்து கடுமை​யாக குலுங்​கியது. இந்த அச்​சம் நிறைந்த சூழலுக்கு மத்​தி​யில் எப்​படியோ நாங்​கள் ஆர்​மீனிய எல்​லையை அடைந்​தோம். இந்த துயர​மான அனுபவத்​தில் இந்​தி​யத் தூதரக அதி​காரி​கள் தொடர்ந்து எங்​களு​டன் தொடர்​பிலேயே இருந்​தது மிக​வும் ஆறு​தல் அளிப்​ப​தாக இருந்​தது.இவ்​வாறு அவர் தனது பயண அனுபவத்​தை பகிர்ந்​து கொண்​டார்​.