Home செய்திகள் தேசிய செய்திகள் இனி பாராளுமன்ற தொகுதிகள் 816

இனி பாராளுமன்ற தொகுதிகள் 816

புதுடெல்லி: ஏப்ரல் 3-
மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் ஏப்​ரல் 16-ம் தொடங்​கு​கிறது.
நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 28 முதல் பிப்​ர​வரி 13ம் தேதி வரை நடை​பெற்​றது. இதன் 2வது அமர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் நிறைவடைந்தது.
கடைசி நாளான நேற்று நாடாளு​மன்ற விவகாரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு மாநிலங்​களவை​யில் பேசும்​போது, “அடுத்த சில வாரங்​களில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் நடை​பெறும்.
இதில் முக்​கிய மசோதாக்கள் நிறைவேற்​றப்​படும்” என்று தெரி​வித்​தார்.இது தொடர்​பாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் ஏப்​ரல் 16-ம் தேதி தொடங்​கி, 18-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில் மக்களவைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 543-ல் இருந்து 816 ஆக அதி​கரிக்க வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற திட்ட​மிடப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் மகளிர் இடஒதுக்​கீட்டு சட்டத்தை முன்​கூட்​டியே அமல்​படுத்த முடி​யும்.
கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்றப்​பட்​டது. இதன்​படி மக்​களவை​யில் மூன்​றில் ஒரு பகுதி இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்பட வேண்​டும். புதிய மசோ​தாக்​களின்​படி மக்​கள​வைத் தொகு​தி​களின் இடங்​கள் 816 ஆக அதி​கரிக்​கும். இதில் 273 இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​படும். இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரிவித்தன.
இது தொடர்​பாக காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் நேற்று முன்​தினம் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 50 சதவீத​மாக அதி​கரிக்க மத்​திய அரசு ஒரு மசோ​தாவை வலுக்கட்டாய​மாக நிறைவேற்ற திட்​ட​மிட்டு உள்​ளது. உதாரணமாக உத்தர பிரதேசத்​தில் தற்​போது 80 மக்​கள​வைத் தொகு​தி​களும், தமிழ்​நாட்​டில் 39 தொகு​தி​களும் உள்​ளன.