Home விளையாட்டு டெல்லி கேப்பிடல்ஸுடன் இன்று மோதல்: 2-வது வெற்றி பெறும் முனைப்பில் மும்பை

டெல்லி கேப்பிடல்ஸுடன் இன்று மோதல்: 2-வது வெற்றி பெறும் முனைப்பில் மும்பை

புதுடெல்லி, ஏப்ரல் 4- ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 142 ரன்​கள் இலக்கை துரத்​திய டெல்லி அணி ஒரு கட்​டத்​தில் 4.3 ஓவர்களில் 26 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை இழந்து பரிதவித்​தது. எனினும் 22 வயதான சமீர் ரிஸ்வி 47 பந்​துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும், அனுபவம் வாய்ந்த டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 32 பந்​துகளில், 39 ரன்​களும் சேர்த்து 17 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி தேடிக்​கொடுத்​திருந்​தனர்.இதில் சமீர் ரிஸ்வி சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தார். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். முதல் ஆட்​டத்​தில் சிறப்​பாக செயல்​படத்​தவறிய கே.எல்​.​ராகுல், பதும் நிசங்​கா, நித்​திஷ் ராணா, அக்​சர் படேல் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி ரன்​கள் குவிப்​ப​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பின்​வரிசை​யில் விப்ராஜ் நிகாம், டேவிட் மில்​லர் ஆகியோர் தாக்​குதல் ஆட்டத்​தால் பலம் சேர்க்​கக்​கூடும். பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் காயத்​தில் இருந்து மீண்டு வந்​துள்ள நடராஜன் லக்னோ அணிக்கு எதி​ராக 3 விக்​கெட்​களை வீழ்த்தி அசத்​தி​யிருந்​தார். இதே​போன்று லுங்​கி நிகிடி, குல்​தீப் யாதவ் ஆகியோ​ரும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்தி இருந்​தனர். முகேஷ் குமார், அக்​சர் படேல் ஆகியோர் ரன் குவிப்பை வெகு​வாக கட்​டுப்​படுத்​தி​யிருந்​தனர்.