
புதுடெல்லி, ஏப்ரல் 4- லண்டனில் வசித்து வரும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு ஆடுகையில் அவரை சமூக ஊடகவாசிகள் பலரும் ‘ஓவர்சீஸ்’ பிளேயர் என்று கிண்டலடித்து வருகின்றனர். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக அன்று பிரமாதமாக ஆடினார். கோலி இப்போதெல்லாம் லண்டன் சென்று அங்கு தன் குடும்பத்துடன் நிம்மதியாக இருந்து வருகிறார். ஒருநாள் தொடருக்காக இந்திய அணியில் ஆட இங்கு வருகிறார், பிறகு ஐபிஎல் மற்றபடி உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆர்வமிருந்தால் அங்கிருந்து வந்து ஆடுகிறார். இதனாலெல்லாம் அவரை ‘வெளிநாட்டு’ வீரர் இங்கு வந்து ஆடுகிறார் என்று கடும் கிண்டல்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விராட் கோலி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இத்தகு கேலியைச் சுட்டிக்காட்டி, “சிலர் ஆர்சிபியில் 5 ஓவர்சீஸ் வீரர்கள் ஆடுகின்றனர் என்று கூறுகின்றனர். அவர்கள் உண்மையில் என்ன சொல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ” என்று கேட்க அதற்கு விராட் கோலி, என்னை ஏன் கேட்கிறீர்கள்? வெளிநாட்டு வீரர்களைக் கேளுங்கள்.நான் ஓவர்சீஸ் பிளேயர் அல்ல.





















