Home விளையாட்டு புதிய வரலாறு படைத்த புவனேஷ்குமார்

புதிய வரலாறு படைத்த புவனேஷ்குமார்

சென்னை, ஏப்ரல் 6- ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்குமார் படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆயுஷ் மாத்ரே விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் புவனேஷ் குமார் இந்த சாதனையை படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த இந்த பட்டியலில் முதல் நபராக இடம் பிடித்தார். எனினும், முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை புவனேஷ்குமாருக்கு கிடைத்துள்ளது. மலிங்கா, பும்ரா கூட டச் பண்ணல 192 போட்டிகளில் விளையாடிய புவனேஷ்குமார் 200 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது பந்து வீச்சு சராசரி 27.25 ஆக உள்ளது. ஐபில் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சஹால் இதுவரை 176 போட்டிகளில் விளையாடி 224 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இரண்டாம் இடத்தில் புவனேஷ்குமார் உள்ளார். மூன்றாம் இடத்தில் சுனில் நரைன் உள்ளர். இவர் 191 போட்டிகளில் விளையாடி 193 ரன்களை சேர்த்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னணி பந்து வீச்சாளராக வலம் வந்த மலிங்கா, மும்பை அணிக்காக விளையாடி வரும் பும்ரா ஆகியோரால் கூட எட்ட முடியாத இந்த சாதனையை புவனேஷ்குமார் படைத்துள்ளார். ஆயுஷ் மாத்ரே விக்கெட்டை வீழ்த்தி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் மலிங்கா 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல, நட்சத்திர வீரர் பும்ரா 147 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் அணி புரட்டி போட்டது. இந்தப்போட்டியில் அசத்தலாக பந்து வீசிய புவனேஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 41 ரன்களை விட்டு கொடுத்தார். ஆனாலும் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.