
பீகார்: ஏப்ரல் 6 –
பீகார் மாநிலத்தில் 82 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை பயிர்கள் சமீபத்தில் தீயில் கருகி சேதமானது. வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால் குறிப்பிட்ட கோதுமை வயல்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மின்மாற்றி அதாவது டிரான்ஸ்ஃபார்மரிலிருந்து வெளியான
சில தீப்பொறிகளே, காய்ந்து நின்ற கோதுமைப் பயிர்களை தீயில் கருகி சேதமாக காரணமாக இருந்ததாக உள்ளூர் மக்களில் சிலர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
திடீரென பலத்த காற்று வீசியதால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை பயிர்களில் தீ மளமளவெனப் பரவி, மிக விரைவிலேயே கட்டுப்பாட்டை மீறி சென்றதாக கூறப்படுகிறது. பீகாரின் லலித்பூர் மாவட்டத்தின் மடவாரா வட்டத்தில் அமைந்துள்ள கரிடோரன் கிராமத்தில்,சமீபத்தில் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து உள்ளனர். தீ விபத்தை நேரில் கண்ட மக்களில் சிலர் டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து தீப்பொறிகள் விழுந்த சில வினாடிகளிலேயே கோதுமை வயல்களில் தீ வேகமாக பரவத் தொடங்கியதாகவும்; சிறிது நேரத்திற்குள்ளாகவே, பரந்த நிலப்பரப்பில் விளைந்து நின்றிருந்த கோதுமை பயிர்கள் தீ-க்கு இரையாகியதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்a


















