Home செய்திகள் தேசிய செய்திகள் நக்சலைட் கமாண்டர் சரண்

நக்சலைட் கமாண்டர் சரண்

ஹைதராபாத்: ஏப்ரல் 7-
தெலங்​கா​னா​வில் நக்​சலைட் கமாண்​டர் மல்லா தனது சகாக்​கள் 40 பேருடன் ஹைத​ரா​பாத் போலீ​ஸார் முன்னிலை​யில் நேற்று சரண் அடைந்​தார்.
நக்​சலைட்​கள் இல்லா நாடாக இந்​தி​யாவை உரு​வாக்க மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, ஒடி​சா, சத்​தீஸ்​கர் உள்​ளிட்ட மாநிலங்​களில் நக்​சலைட்​கள் பலர் என்​க​வுன்ட்​டர் செய்யப்​பட்​டனர். மேலும் அரசின் பொது​மன்​னிப்பு மற்​றும் மறுவாழ்வு கொள்கை காரண​மாக நக்​சலைட்​கள் பலர் தாமாக முன்​வந்து சரண் அடைந்​தனர்.
தெலங்​கா​னா​வில் கடந்த ஜனவரி 2-ம் தேதி, கொரில்லா பிரி​வின் கமாண்​டர் பர்ஸா தேவா என்​கிற தேவண்ணா சரண் அடைந்​தார்.
பிறகு கடந்த பிப்​ர​வரி 22ம் தேதி மத்​திய நக்​சலைட் இயக்க உறுப்பினர் திப்​பிரி திருப்​பதி என்​கிற தேஜி (62), சீனியர் நக்சலைட் மல்லா ராஜி ரெட்டி உட்பட 20 பேர் சரண் அடைந்​தனர்.
மேலும் 120 நக்​சலைட்​கள், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி முன்​னிலை​யில் கடந்த மார்ச் 7-ம் தேதி ஆயுதங்​களு​டன் சரண் அடைந்​தனர். இந்​நிலை​யில் நக்​சலைட் கொரில்லா பிரி​வின் முக்​கிய நபராக செயல்​பட்டு வந்த சோதி கேஷாலு என்​கிற மல்லா நேற்று தனது சகாக்​கள் 40 பேருடன் ஹைத​ரா​பாத்​தில் போலீஸ் அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரண் அடைந்​தனர். அப்​போது ஏகே 47 ரக துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை இவர்​கள் ஒப்​படைத்​தனர்.