Home செய்திகள் உலக செய்திகள் உலக தங்க வரலாற்றில் இப்படி நடந்தது இல்லை! தங்கத்தை அள்ளிக்குவிக்கும் சீனா

உலக தங்க வரலாற்றில் இப்படி நடந்தது இல்லை! தங்கத்தை அள்ளிக்குவிக்கும் சீனா

நியூயார்க்: ஏப்ரல் 7-
தங்கத்தை வாங்கி குவிக்கும் வழக்கத்தை சீனா அதிகப்படுத்தி உள்ளது. அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், சீனா தனது தங்க இருப்புகளை அதிகரிக்கும் கொள்கையைத் தீவிரப்படுத்துவதாலேயே இந்தக் கொள்முதலில் இவ்வளவு பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளில் பதியப்பட்ட கொள்முதல் அளவுகள் பிரமிக்க வைக்கும் நிலையில், உண்மையான தொகை பன்மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
உலக அளவில் பொருளாதார நிலையற்றத்தன்மை மற்றும் பணவீக்க அச்சங்களுக்கு மத்தியில், தங்கத்தின் மீதான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்பை கணிசமாக உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தங்க இருப்பு அதிகரிப்பில் முன்னணியில் இருக்கின்றன. இரண்டு நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.