Home செய்திகள் தேசிய செய்திகள் கேரளாவில் ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா பினராயி விஜயன்?

கேரளாவில் ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா பினராயி விஜயன்?

திருவனந்தபுரம், ஏப்ரல் 8- கேரளாவில் நாளை 9-ம் தேதி சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதில் ஆளும் இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும் (எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும்​(​யுடிஎஃப்) இடையே கடும் போட்டி நில​வு​கிறது. கடந்த 2016, 2021-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தல்​களில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான எல்​டிஎஃப் பெரு​வாரி​யாக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​தது. 2 முறை​யும் பின​ராயி விஜயனே முதல்​வ​ராக பணி​யாற்​றி​னார்.இந்த 2026 தேர்​தலிலும் முதல்​வர் பின​ராயி விஜயன் தலை​மையி​லான எல்​டிஎஃப் வெற்றி பெற்று ஹாட்​ரிக் அடிக்​குமா என்று கட்​சித் தொண்​டர்​கள் ஆவலுடன் எதிர்​பார்க்​கின்​றனர். கடந்த 10 ஆண்​டு​களில் கேரளாவில் ஏராள​மான நலத்​திட்​டங்​களை அமல்​படுத்தி மக்​களின் ஆதரவை முதல்​வர் பின​ராயி விஜயன் பெற்​றுள்​ளார். இதனால் அவருக்கு மக்​களிடையே ஏகோபித்த செல்வாக்கு உள்​ளது. நாட்டில் கேரளா, மேற்கு வங்​கம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்​கள் மட்​டுமே இடது​சாரி கட்​சிகளின் கோட்​டை​யாக இருந்து வந்​தது. இந்​நிலை​யில் 2004 மக்​கள​வைத் தேர்​தலில் 59 இடங்​களில் இடது​சாரி கட்சி எம்​.பி.க்​கள் வெற்றி பெற்​றனர். 2009 மக்​கள​வைத் தேர்​தலில் இடது​சாரி கட்​சிகள் 25 இடங்​களை​யும், 2014-ல் 11 இடங்​களை​யும், 2019-ல் 5 இடங்​களை​யும், 2024-ல் 8 இடங்​களை​யும் இடது​சா​ரிக் கட்​சிகள் வென்​றன. ஆனாலும், கேரளாவில் இடது​சா​ரி​கள் தலை​மையி​லான எல்டிஎஃப்-புக்கு ஆதரவு அமோக​மாகவே உள்​ளது. இருந்​த​போதும் கேரள சட்​டப் பேர​வைத் தேர்​தல் இடது​சா​ரி​களுக்கு ஒரு வாழ்வா சாவா தேர்​தலாக பார்க்​கப்​படு​கிறது என்று அரசி​யல் விமர்​சர்​கள் தெரிவிக்​கின்​றனர். இந்​தத் தேர்​தலில் இடது​சா​ரி​கள் தலை​மையி​லான எல்​டிஎஃப் தோல்வி கண்​டால், தேசிய அளவில் எந்த ஒரு மாநிலத்​தி​லும் இடது​சா​ரி​களின் அரசே இல்லை என்ற நிலை உரு​வாகி​விடும். கேரள சட்​டப் பேர​வைத் தேர்​தலில் தோல்வி என்​பது இடது​சாரி கட்​சிகளுக்கு ஒரு முழு​மை​யான அழிவை குறிக்​காது என்​ற​போ​தி​லும், இது நிச்​சய​மாக தேசிய அளவில் ஒரு பெரிய அடி​யாக அக்​கட்​சிகளுக்கு இருக்​கும். ஏனெனில் இது நாடு முழு​வதும் இடது​சா​ரி​களுக்கு மாநில அரசே இல்​லாத நிலையை உரு​வாக்​கும்.