Home செய்திகள் உலக செய்திகள் 150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள்

150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள்

சமீப காலத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 ஆக இருந்தது, ஆனால் தற்போது 60-க்கும் கீழ் குறைந்து விட்டது. இதற்கு மாறிவிட்ட மக்களின் வாழ்க்கை முறை முதல் சுற்றுசூழல் பிரச்சினைகள் என பல காரணங்கள் உள்ளது. இருப்பினும், ஜப்பானில் தற்போது 100 வயதைத் தாண்டி வாழ்பவர்களின் எண்ணிக்கை உலகின் மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது.ஆனால், பாகிஸ்தானில் ஒரு இனக்குழு இருப்பதும், அந்த இனக்குழுவைச் சேர்ந்த பெண்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலான யாராலும் நம்ப முடியாத ஆயுட்காலத்தைக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? அந்த குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுன்ஸா சமூகப் பெண்கள்தான். இது வடக்கு பாகிஸ்தானில் உள்ள யாசின், ஹுன்ஸா மற்றும் நாகர் பள்ளத்தாக்குகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு பூர்வகுடி இனக்குழுவாகும். அசாதாரணமான நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த ரகசிய இனக்குழுவின் பெண்கள் தங்கள் அழகுக்காகவும் மிகவும் பிரபலமானவர்கள். இந்த இனக்குழுவை சேர்ந்த பெண்கள் எழுபது வயதானலும் அவர்கள் இளமையாகவே காட்சியளிக்கிறார்கள். ஹுன்சா மக்கள் யார்? தங்களின் தனித்துவமான, தன்னிறைவு பெற்ற மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறைக்காக அறியப்படும் ஹுன்சா இனக்குழு மக்கள், சில பகுதிகளில் இவர்கள் ஹுன்சுகுச் அல்லது புருஷோ மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வடக்கு பாகிஸ்தானில் உள்ள யாசின், ஹுன்சா மற்றும் நாகர் பள்ளத்தாக்குகளில் வசித்து வருகின்றனர். ஹுன்சா இனப் பெண்கள் இயல்புக்கு மாறாக நீண்ட ஆயுட்காலத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது; இவர்களின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கக்கூடும். இணையத்தில் ஒரு பிரபலமான நிகழ்வு, பின்வருமாறு குறிப்பிடுகிறது, 1984-ஆம் ஆண்டில் அப்துல் மொபாத் என்ற நபர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரது பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த ஆண்டு 1832 என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் அவருக்கு அப்போது 152 வயது ஆகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் முதலில், குழப்பமடைந்த விமான நிலைய அதிகாரிகள் இது ஏதோ ஒரு பிழையாக இருக்கலாம் என்று கருதினர்; ஆனால், முழுமையான விசாரணைக்குப் பிறகு, தங்கள் முன் நின்றுகொண்டிருந்த அப்துல் மோபத் என்பவர் உண்மையில் 152 வயதுடையவர் என்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்துல் மோபத், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹுன்சா சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.