Home செய்திகள் உலக செய்திகள் 10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்! அடங்க மறுக்கும் இஸ்ரேல்.. லெபனான் மீது தாக்குதல்

10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்! அடங்க மறுக்கும் இஸ்ரேல்.. லெபனான் மீது தாக்குதல்

பெய்ரூட்: ஏப்ரல் 9 –
ஈரான் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததது என நாம் நிம்மதி அடைவதற்குள்ளேயே வளைகுடாவில் மீண்டும் ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. லெபனான் மீது ஈரான் மிக மோசமான ஒரு தாக்குதலை நடத்தியுள்ள சூழலில், அதில் குறைந்தது 254 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இது அங்கு நிலைமையை மோசமாக மாற்றுகிறது. வளைகுடாவில் இது கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்தது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த இந்த போரால் சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகே நேற்றைய தினம் இந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்காவும் ஈரானும் வெளியிட்டது.லெபனான் இதில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பில் ஈரான் மட்டுமின்றி லெபனான் உட்பட வளைகுடாவில் நடக்கும் அனைத்து தாக்குதலுமே நிறுத்தப்படும் எனப் பாகிஸ்தான் கூறியிருந்தது. இருப்பினும், இதை மறுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனானுக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் தொடர்பில்லை என்றும் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் கூறியது. வெறும் பேச்சு உடன் நிற்காமல் லெபனான் மீது தாக்குதலையும் ஈரான் ஆரம்பித்தது. 254 பேர் உயிரிழப்பு இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. வெறும் 10 நிமிட இடைவெளியில் 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியுள்ளது. இந்த மிக மோசமான தாக்குதலில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டு, 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனோர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கான தேடுதல் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. மிக பெரிய தாக்குதல் லெபனான் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட மிக பெரிய தாக்குதலில் ஒன்றாக இது இருக்கிறது. மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலைத் தொடங்கியுள்ளது. லெபனான் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இல்லை எனச் சொல்லியே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.