Home செய்திகள் தேசிய செய்திகள் 5 மணிநேரம் தண்ணீருக்குள் பதுங்கல்.. தாமரை தண்டின் வழியே சுவாசித்த திருடன்

5 மணிநேரம் தண்ணீருக்குள் பதுங்கல்.. தாமரை தண்டின் வழியே சுவாசித்த திருடன்

போபால், ஏப்ரல் 10- மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 42 வயது நபர் திருட முயன்றார். இதனை போலீசார் பார்த்ததும் அவர் ஓடும் ரயிலி்ல இருந்து குளத்துக்குள் குதித்தார். 5 மணிநேரம் போலீசார் தீவிரமாக தேடி அவரை குளத்தில் இருந்து கைது செய்தனர். இந்நிலையில் தான் குளத்துக்குள் 5 மணிநேரம் மூச்சடிக்கி அந்த திருடன் இருந்தது எப்படி? தாமரை தண்டு எப்படி அவருக்கு உதவியது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. திருடுவது சட்டப்படி குற்றமாக இருந்தாலும் கூட பலரும் திருந்துவது இல்லை. பூட்டிய வீடு, அலுவலகம், கடைகள், வங்கிகளில் நுழைந்து திருடுவது, பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவது, சாலைகளில் செல்லும் மக்களை வழிமறித்து மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடிப்பது என்று பல்வேறு சம்பவங்களில் திருடர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திருட்டுகளில் ஈடுபடும் நபர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறைகளை பயன்படுத்தி நகை, பணத்தை அள்ளி செல்கின்றனர்.
இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் கூட பலரும் திருந்துவது இல்லை. தொடர்ந்து திருட்டில் தான் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் கிதவுலா என்ற பகுதியில் அதிகாலையில் ரேவா – இத்வாரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் ஏசி பெட்டியில் பெண் ஒருவர் பயணித்தார். இந்த ரயில் சிஹோரா ரோடு ரயில் நிலையம் அருகே குறைந்த வேகத்தில் சென்றது. அப்போது ரயிலுக்குள் ஏறிய ஒருநபர் திடீரென்று அந்த பெண்ணின் கையில் இருந்த பையை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியில் அந்த பெண் கூச்சலிட்டார். அப்போது அந்த பெட்டியில் இருந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்றனர். இதையடுத்து பயந்துபோன திருடன் ஓடும் ரயிலில் இருந்து அருகே உள்ள குளத்துக்குள் குதித்தார்.