Home மாவட்டங்கள் பெங்களூர் ஏப்.17 முதல் கோடை விடுமுறை

ஏப்.17 முதல் கோடை விடுமுறை

சென்னை: ஏப்ரல் 10-
ஒன்​றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித்​துறை அறி​வித்​துள்​ளது.
இதுதொடர்​பாக, பள்​ளிக் கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள் மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு நேற்று அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: பள்​ளிக் கல்​வித் துறை கட்​டுப்​பாட்​டின் கீழ் செயல்​படும் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​கள் மற்​றும் தனி​யார் சுயநிதி பள்​ளி​களில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்​கான இறு​தித் தேர்​வு​கள் ஏப்.16-ம் தேதி முடிவடைகின்​றன.
இதையடுத்​து, 17-ம் தேதி முதல் பள்ளி மாணவர்​களுக்கு மட்​டும் கோடை விடு​முறை என விடப்​படு​கிறது. அதே வேளை​யில், வரும் 25-ம் தேதி வரை அரசு மற்​றும் அரசு உதவி​பெறும் தொடக்க, நடுநிலை, உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் பணிபுரி​யும் எல்​கேஜி, யுகேஜி ஆசிரியர்​கள் உள்பட அனைத்து ஆசிரியர்​களும் பள்​ளிக்கு வந்து விடைத்​தாள் மதிப்​பீடு, மாணவர் சேர்க்கை பணி, நிர்​வாகப் பணி​கள் மற்​றும் தேர்​தல் பணி​களை மேற்​கொள்ள வேண்​டும்.புதிய பாடநூல்கள் அறிமுகம்பள்​ளி​களுக்கு வரும் கல்வி ஆண்​டுக்​கான (2026-27) வகுப்பு ஜூன் 1-ம் தேதி தொடங்​கும். வரும் கல்​வி​யாண்டு முதல் ஒன்று முதல் 3-ம் வகுப்பு பயிலும் குழந்​தைகளுக்கு புதிய பாடநூல்​கள் அறி​முகப்​படுத்​தப்​படு​வ​தால், இந்த வகுப்​பு​களை கையாளும் ஆசிரியர்​களுக்கு ஜூன் 1 முதல் 3 வரை மாவட்ட அளவில் பணி​யிடை பயிற்சி அளிக்​கப்​படும்.
எனவே, 1, 2, 3 ஆகிய வகுப்பு குழந்​தைகளுக்கு மட்​டும் ஜூன் 4-ம் தேதி முதல் வகுப்பு நடை​பெறும். இவ்​வாறு அந்த சுற்​றறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.