Home செய்திகள் உலக செய்திகள் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்தோர் 1,953ஆக உயர்வு

இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்தோர் 1,953ஆக உயர்வு

பெய்ரூட்: ஏப்ரல் 11 –
லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953ஆக உயர்ந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்தது. இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, ஈரான், இஸ்ரேல், வளைகுடா நாடுகள், லெபனான் என அனைத்து பகுதிகளிலும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில் ஏப்ரல் 8ம் தேதி அமலுக்கு வந்த போர்நிறுத்தத்திற்குப் பிறகான தாக்குதல்களில் மட்டும் 357 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் அறிவித்துள்ளது. உயிரிழப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க உயர்வு, தொடரும் மோதலையும் அது பொதுமக்கள் மீது ஏற்படுத்தும் பேரழிவையும் எடுத்துக்காட்டுகிறது. மோதலால் பாதிக்கப்பட்டவர்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடி உதவி வழங்குமாறு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.